பாகிஸ்தான் தூதாண்மைக் கொள்கையின் அடிப்படைகளில் ஒன்று சீனாடன் சிறந்த உறவு என்பதாகும். சீனாவுடன் செயல்நோக்கு ஒத்துழைப்பை வலுப்படுத்த பாகிஸ்தான் விரும்புகிறது. இரு தரப்பும் எட்டியுள்ள உடன்படிக்கைகளைப் பன்முகங்களிலும் செயல்படுத்தி பாகிஸ்தான்-சீன பொருளாதாரப் பாதையின் கட்டுமானத்தை முக்கியமாக முன்னேற்ற பாகிஸ்தான் விரும்புவதாக நாவாஸ் ஷெரிப் கூறினார்.