• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நிகழ்ச்சியில் மதியழகன் வாழ்த்துரை
  2014-04-15 19:04:00  cri எழுத்தின் அளவு:  A A A   

அனைவருக்கும் வணக்கம்!

முதலில், ஹாங்காங்கிலுள்ள இளம் இந்திய நண்பர்கள் குழு, என்னை இங்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி.

ஹாங்காங்கில் 10 ஆண்டுகளாக,தமிழ் வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது. சீன வானொலி தமிழ்ப் பிரிவின் சார்பிலும், தமிழ்ப் பிரிவின் தலைவர் திருமதி.கலைமகள் அவர்களின் சார்பிலும், தமிழ் வகுப்பின் பத்தாம் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். சீன வானொலி தமிழ்ப் பிரிவு மற்றும் பிரிவின் தலைவர் திருமதி.கலைமகள் அவர்களின் சார்பில், தமிழ் வகுப்புப் பத்தாம் ஆண்டு விழாவுக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றேன்.

தமிழ் மொழிக்கும், தமிழ் பண்பாட்டிற்கு நீண்டகால வரலாறு உள்ளது. உலகளவில் தமிழ் மொழி பெருமை மிகுந்தது. தமிழ் பண்பாடு பாரம்பரிய செல்வம் மிகுந்தது.

தமிழ் வகுப்பு, ஹாங்காங்கில் வாழும் தமிழ் இளைஞர்கள் தங்களது பண்பாட்டின் வேரை அறிந்துக் கொள்ளும் பாலம். தமிழ் வகுப்பில், இன்று தமிழ் பேசும் நாம் நாளை தமிழ் பண்பாடு, வரலாறு, இசை, பாடல், நடனம் உள்ளிட்ட தமிழ் வழக்கங்களையே மேலும் நேசிப்போம்.

கடந்த 10 ஆண்டுகளாக சிறந்த முறையில் நடைபெற்றுள்ள இந்த தமிழ் வகுப்பு, அடுத்த 10 ஆண்டுகளில் மேலும் ஒளிமயமான எதிர்காலம் நோக்கி நடைபோடும் என்று நம்புகின்றோம்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040