• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
42வது ஜெனீவா பன்னாட்டு கண்டுபிடிப்புப் பொருட்களின் கண்காட்சி
  2014-04-17 10:46:49  cri எழுத்தின் அளவு:  A A A   

இதனிடையில், சீனப் பிரதிநிதிக் குழு மூன்று ஆண்டுகளாக இக்கண்காட்சியில் பங்கெடுக்கின்றது. சீனாவின் கண்டுபிடிப்புகளில், மாணவர்கள் வழங்கிய சாதனைகள் 50விழுக்காடு வகிப்பது குறிப்பிடத்தக்கது. பெய்சிங்கைச் சேர்ந்த இடைநிலை பள்ளி மாணவர் சேங் ஹவ் குன் கண்டறிந்த ஒரு புதிய ரக மதிநுட்ப சேமிப்பு அலுமாரி இக்கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அவரது அன்றாட வாழ்க்கையில் பொருட்களைத் தேட கடினமாக இருந்தபோது இதனை கண்டுபிடிக்கும் எண்ணம் ஏற்பட்டதாம். அவர் எடுத்துக்கூறியதாவது:

என் பெயர் சேங் ஹவ் குன், பெய்சிங் 4வது இடைநிலை பள்ளியில் கல்விக் கற்று வருகிறேன். நாள் கண்டறிந்த இந்த அலுமாரிக்குள், சுழலும் திறனுடைய பல கூடைகளும் ஒரு கண்ணாடியும் இருக்கின்றன. இந்த கண்ணாடி, கூடைகளை நிழற்படம் பிடிக்க முடியும். இவ்வலுமாரியில் ஏதாவது எந்தெந்த பொருட்களைத் தேடும்போது, இணையத் தளத்தில் வேண்டிய பொருளின் தொடர்புடைய நிழற்படங்களைப் பார்த்து தேர்ந்தெடுப்பதன் மூலம், அந்தப்பொருள் இருக்கும் கூடை தனியாகவே வெளியே சுழல தொடங்கும் என்றார் சேங் ஹவ் குன்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040