தொழில் நிறுவனத்தின் வளர்ச்சியை விரைவுப்படுத்தும் அதேவேளையில், உள்ளூர் உயிரின வாழ்க்கை சூழல் பாதுகாப்பில் குவா சின் நிறுவனம் கவனம் செலுத்துகின்றது. இந்த ஆலையில் 70 கோடி யுவான் முதலீட்டில் குறைந்த்து 18.9 கோடி யுவான் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியில் செலுத்தப்பட்டது. தொழில் நுட்பப் பிரிவின் பொறுப்பாளர் ஒருவர் கூறியதாவது
குவா சின் ஒரு சிமெண்ட் நிறுவனமாகும். அதிக தூளை வெளியேற்ற வேண்டும். ஆனால், திபெத்தின் சுற்றுச்சூழல் வலுவற்றது. தூள் வெளியேற்றத்தைக் குறைக்க அதிக முயற்சி மேற்கொண்டுள்ளோம். தவிர, சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரியங்கள் முறைப்படி பரிசோதனை மேற்கொள்கின்றன. இவ்வாண்டு ஆலையிலிருந்து வெளியேறிய மாசு நீரை மீண்டும் பயன்படுத்த துவங்கினோம். தவிர, உற்பத்தியில் ஏற்படும் வெப்ப ஆற்றல் மூலம் தற்போது நாளுக்கு 1.4 இலட்சம் கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றோம் என்றார் அவர்.
இவ்வாண்டின் இறுதியில் குவா சின் நிறுவனத்தின் 3வது உற்பத்தி மார்க்கம் ழ்காட்ச பிரதேசத்தில் உற்பத்தி செய்ய துவங்கும். ஆண்டுக்கு அது 8 இலட்சம் உயர் தர சிமெண்ட் உற்பத்தி செய்ய முடியும். ழ்காட்ச, ஆலி, நேபாளம் ஆகிய இடங்களின் சந்தை தேவையை நிறைவேற்றும்.
குவா சின் நிறுவனத்தின் திபெத் கிளை தலைவர் நிவேய்துங் கூறியதாவது
திபெத்தில் தொழில் நிறுவனங்கள் இரு கடமைகளை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும். ஒன்று, திபெத், சுற்றுச்சூழல் நிலைமை மிக வலுவற்ற பிரதேசமாகும். ஆகவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இரண்டு, திபெத்தில் பொருளாதாரம் மிக பின்தங்கிய பகுதியில் திபெத்துக்கு நிதி உதவி மட்டும் என்ற வடிவத்திலிருந்து திபெத் மக்களுக்கு தொழில் நுட்பம் சொல்லி கொடுக்கும் வடிவத்துக்கு மாற்ற வேண்டும். திபெத்தின விவசாய மற்றும் ஆயர் இளைஞர்கள் நவீன தொழிற்துறை வளர்ச்சிக்குச் சாதகமான தொழிலாளர்களாக மாறுவதற்கு உதவி செய்ய வேண்டும். தற்போது, எமது நிறுவனத்தில் பல திபெத்தின பணியாளர்கள் தலைவர் என்ற பதவியை ஏற்றுள்ளனர் என்று அவர் கூறினார்.