• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வழக்கு நீக்கத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வாக்குறுதி
  2014-10-19 18:10:00  cri எழுத்தின் அளவு:  A A A   

நடப்புக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கும் சீன வணிக அமைச்சர் காவ் ஹுசேங் கூறுகையில், ஒன்றுக்கொன்று முக்கிய வர்த்தக கூட்டாளியாக தகழும் சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக சர்ச்சையைச் சந்திப்பது இயல்பே. உரிய முறையில் சர்ச்சையைக் கையாள்வது முக்கியத்துவம் வாய்ந்தது. ஹுவா வேய் நிறுவனத்தின் தொலைத் தொடர்பு சாதனங்களுக்கான நிதியுதவியை எதிர்க்கும் வழக்கை ஐரோப்பிய ஒன்றியம் நீக்குவது குறித்து இருதரப்பும் உடன்பாட்டுக்கு வருவது, வர்த்தகச் சர்ச்சையைக் கட்டுப்படுத்துவதில் இருதரப்புக்கும் விவேகமும் திறமையும் உண்டு என்பதை மீண்டும் வெளிப்படுத்துகிறது என்று கூறினார்.

மேலும், சீர்திருத்தத்தை சீனா பன்முகங்களிலும் ஆழமாக்கும் முக்கிய நடவடிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில் நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும். பட்டுப்பாதை பொருளாதார மண்டலம் மற்றும் கடல்வழி பட்டுப்பாதையின் கட்டுமானத்தில் ஐரோப்பிய ஒன்றியம் பங்கெடுக்க சீனா வரவேற்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040