மெக்சிகோ நாட்டின் டீஜுவனா நகரைச் சேர்ந்த போக்குவரத்துக் காவல்துறையைச் சேர்ந்த ஜோஸ் ருபென் ஏச்செவெர்ரியா என்பவர் அண்மையில் உள்ளூரில் புகழ்பெற்றுள்ளார். அவர் அக்டோபர் 19ஆம் நாள் போக்குவரத்து வழிக்காட்டி பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த அதேநேரத்தில் மைக்கல் ஜாக்சன் போல நடித்து 'Moonwalk' எனும் நடனத்தை அரங்கேற்றியுள்ளார். அவரது சிறந்த நடனம், வழியில் செல்வோர் மற்றும் ஓட்டுநர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.
நடனம் புரிந்ததற்காக காரணம் பற்றி ஏச்செவெர்ரியா பேசுகையில், இத்தகைய நடனம் மூலமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி செல்வோர் மற்றும் ஓட்டுநர்களுக்கு மனமகிழ்ச்சியை ஏற்படுத்த விரும்புவதாக தெரிவித்தார்.
அவரது நடனம் அன்று அதிக மக்களை கவர்ந்துள்ளது. அவருடன் இணைந்து புடைப்படம் எடுக்குமாறும் சில பயணிகள் கேட்டுக்கொண்டனர்.