சீனாவில் பயணமாக வருகை தந்துள்ள அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவுடன் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 12ஆம் நாள் புதன்கிழமை பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடந்த ஆண்டில் இரு தரப்பு வர்த்தகத் தொகை, 5,200கோடி அமெரிக்க டாலர் அளவை எட்டியுள்ளது. இரு நாடுகளுக்கிடையே மனதரின் பரிமாற்றம் 40லட்சத்தைத் தாண்டியுள்ளது. காலநிலை மாற்றத்தை சமாளிப்பது, எபோலா நோய் தடுப்பு, பயங்கரவாதத் எதிர்ப்பு நடவடிக்கைகளில் இரு நாடுகளும் இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. சீனா-அமெரிக்கா இடையேயான புதிய உறவை உருவாக்குவது, இரு நாட்டு மக்களுக்கு பயனளிப்பதாகவும், ஆசிய-பசிபிக் பிரதேசம் உள்ளிட்ட உலகின் அமைதி, நிலைப்புத்தன்மை, செழுமைக்கு உதவுவதாகவும் அமைவதை, இந்த உண்மைகளே காட்டுகின்றன என்று ஷிச்சின்பிங் பேச்சுவார்த்தையில் குறிப்பிட்டார்.
இரு நாட்டு தூதாண்மை உறவு நிறுவப்பட்டு, இவ்வாண்டுடன் 35 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. கடந்த 35 ஆண்டுக்கால வளர்ச்சியுடன் சீன-அமெரிக்க உறவு புதிய வரலாற்றுத் துவக்கத்தில் நிற்பதாகவும் ஷி ச்சன்பிங் சுட்டிக்காட்டினார்.