மேலும், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு வளர்ப்பது குறித்து ஷி ச்சின்பிங் இப்பேச்சுவார்த்தையில் 6 முன்மொழிவுகளை தெரிவித்துள்ளார்.
ஒன்று, உயர்மட்ட நிலை தொடர்பையும் பரிமாற்றத்தையும் அதிகரித்து, இரு தரப்புக்கு தொலைநோக்கு நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும்.
இரண்டு, ஒன்றை ஒன்று மதிக்கும் அடிப்படையில் இரு நாட்டுறவை கையாள வேண்டும்.
மூன்று, பல்வேறு துறைகளைச் சார்ந்த பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் விரிவாக்க நடைமுறைப்படுத்த வேண்டும்.
நான்கு, செயலாக்கம் வாய்ந்த முறையில் கருத்து வேற்றுமைகளையும் உணர்வுடைய பிரச்சினைகளையும் கட்டுப்படுத்த வேண்டும்
ஐந்து, ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் சகிப்புத்தன்மை வாய்ந்த ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும்.
ஆறு, பல்வகை பிரதேச மற்றும் உலகளாவிய அறைகூவல்களை இணைந்து சமாளிக்க வேண்டும்.