• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் கூட்டத்தொடரில் மதத் துறை உறுப்பினர்கள் ஆலோசனை
  2015-03-06 15:08:45  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனத் தாவோ மதச் சங்கத்தின் துணைத் தலைவர் லியூ குவெய் யுவானுக்கு இவ்வாண்டு சுமார் 70வயது. மதத் துறையில் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் உறுப்பினராக, பொது மக்களின் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளை அறிந்துக் கொண்டு, பொது மக்களின் சார்பில் அரசுக்கு ஆலோசனை வழங்குவது என்பது, தனக்கு மிகவும் முக்கியமான கடமையாகும் என்று அவர் கருதுகின்றார்.

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு தொடர்பான பணியில் 18 ஆண்டுகளாக அவர் ஈடுபட்டுள்ளார். அவரால் வழங்கப்பட்டுள்ள கருத்துருக்களின் அம்சங்கள், மதப் பிரச்சினையுடன் மட்டுமல்லாமல், பெரும் அளவில் பொது மக்களின் வாழ்க்கையுடனும் நெருக்கமாக தொடர்புடையது. நடப்புக் கூட்டத்தொடரின்போது, லியூ குவெய் யுவான் மூன்று கருத்துருக்களை வழங்கினார். இதில், இணைய மூல வியாபாரத்தில் நேர்மையை அதிகரிப்பது, குப்பைகளை வகைப்படுத்தி கையாள்வது, பண்பாட்டு மரபு செல்வத்தைப் பாதுகாப்பது ஆகியவை இடம்பெறுகின்றன. இது பற்றி லியூ குவெய் யுவான் மேலும் கூறுகையில், மதமானது, சமூகத்தில் ஒரு உறுப்பு திகழ்கின்றது. இது, பல பொது விவகாரங்களுடன் தொடர்புடையது. மதவாதியான நான், சமூகத்தில் உறுப்பினராகவும் இருக்கிறேன் என்றார்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040