ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து சேர்ந்திருக்குமா இல்லையா என்பதை முடிவு செய்யும் வகையில், பிரிட்டன் 2017ஆம் ஆண்டுக்குள் பொது மக்கள் வாக்கெடுப்பை நடத்தும் என்று டேவிட் கேமரூண் தெரிவித்தார்.
பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து சேர்ந்திருப்பது, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டனின் நலன்களுக்குப் பொருந்தியது. ஆனால், அதேரேரம், பிரிட்டனின் பொது மக்களின் முடிவுக்கு அவர் மதிப்பு அளிக்க வேண்டும் என்றும் பிரான்சுவா ஒலோந்த் தெரிவித்தார்.