• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத் இனம்
  2015-06-03 17:04:15  cri எழுத்தின் அளவு:  A A A   

அடுத்து, திபெத் இனத்தன் முக்கிய விழா பற்றி.

திபெத் இனம், பல்வகை விழாக்களைக் கொண்டாடுகிறது. இவை, உழைப்பு, நினைவு, சமூகத் தொடர்பு, சுற்றுலா ஆகிய தனிச்சிறப்புமிக்க தலைப்பில் நடைபெறும். இவற்றில், திபெத் பாரம்பரிய புத்தாண்டு, லிங்கா கொண்டாட்டம், ஷோடன் விழா ஆகிய மூன்று விழாக்கள் அதிக புகழ்பெற்றவை. திபெத் நாள்காட்டியின் முதல்நாள், மிக முக்கியமான விழா. அதன் படி முதல் திங்களின் 15-வது நாள், திபெத் மக்கள் வண்ண விளக்குகளைக் கண்டுரசித்து விழாவைக் கொண்டாடுவது வழக்கம்.

அடுத்து, திபெத் இனத்தின் பண்பாடு பற்றி

திபெத் இனத்தின் பண்பாடு, நீண்டகாலமாகவும் ஒளிமயமாகவும் உள்ளது. 7-வது நூற்றாண்டின் துவக்கத்தில், திபெத் எழுத்துக்கள் பதிவான ஆவணங்கள் உள்ளன. 10 முதல் 16-வது நூறாண்டு வரை, திபெத் இனத்தின் பண்பாடு செழுமையடைந்தது. இதில், உலகில் மிக நீளமான கவிதையான கிங்கெல்சால் எனும் கவிதை, பல நூறு ஆண்டுகளாக பரந்த அளவில் பரவியுள்ளது. இந்த கவிதை, திபெத் இனப் பழங்குடியினத்தின் வரலாற்றைப் பதிவுச் செய்துள்ளது. மொத்தம் 100க்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன.கவிதையை தவிர, திபெத் நாடகம் தனிசிறப்புமிக்கது. திபெத் இன மக்கள் உற்சாகமான மற்றும் மகிழ்ச்சியான மனப்பான்மையுடன் வாழ்ந்து வருகின்றனர். திபெத்தின் ஆடல் மற்றும் பாடல் இந்த தேசிய இனத்தின் தன்மையை முற்றிலும் வெளிக்காட்டுகிறது.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040