தியன் ச்சி ஃபாங் எனும் இடம், தாய்காங் வீதியிலுள்ள 210ஆவது தெருவில் அமைந்துள்ளது. இங்குள்ள சிறப்பான தொழிற்சாலையின் பணிமனைகள், பல்வகை கலையரங்களாக மாற்றப்பட்டுள்ளன. கலை நிறைந்த சூழ்நிலை மற்றும் பாணியை அவை வலுப்படுத்துகின்றன. தாய்காங் வீதியில் அதிகமாக அமைந்துள்ள கலைப் பொருட்கள் கடைகள், கலையகங்கள், வடிவமைப்பு அறைகள் ஆகியவை, வணிகர்கள் மற்றும் கலைஞர்களின் விவேகத்துடன், புத்துணர்வு வாய்ந்த தொழிலின் வளர்ச்சிக்கு வழிவகுத்து வருகின்றன.