• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தியன் ச்சி ஃபாங் மற்றும் 8ஆவது இலக்க பாலம் 1
  2015-11-14 18:15:28  cri எழுத்தின் அளவு:  A A A   

தியன் ச்சி ஃபாங் மற்றும் 8ஆவது இலக்க பாலத்தின் அருகில் பண்பாட்டு நறுமணமிக்க கலை காட்சியகங்கள் அதிகமாக உள்ளன.

ஷாங்காய் முதலாவது இலக்க நுண்கலை காட்சியகம், உயர் நிலை மானுட பண்பாட்டு மற்றும் கலை மண்டபமாகும். உயர் நிலை கலை நிறுவனம் என்ற முறையில், அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை கண்டிப்பான வரையறையில் உள்ளது. பொருள் சேகரிப்பு, கண்காட்சி, பரிமாற்றம், ஆய்வு, கருத்தரங்கு, சமூகத் தொடர்பு உள்ளிட்ட சேவைகள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்றன. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் புகழ்பெற்ற கலைஞர்களின் எண்ணெய் ஓவியங்கள், பாரம்பரிய சீன ஓவியங்கள், சிற்பங்கள் உள்ளிட்ட தலைசிறந்த படைப்புகளை இந்த காட்சியகத்தில் கண்டு மகிழலாம். புதிய நூற்றாண்டில் கலைத் துறையிலான மதிப்புக்குரிய முன்மாதிரிகளாக அவை திகழ்கின்றன. முதல் மாடியில் சுமார் 300 சதுர மீட்டர் பரப்பளவுடைய காட்சியிடத்தில், பண்பாடு, அழகியல், பொறியியல் ஆகியவை இணைந்து நேர்த்தியாகக் காட்சியளிக்கின்றன. 2ஆவது மாடியிலுள்ள காட்சியிடத்தின் பரப்பளவு சுமார் 1200 சதுர மீட்டராகும். உயர்ந்த கலை மண்டபத்துக்குச் செல்லும் அதேவேளை, சுதந்திரமான இடம் வழங்கும் நல்ல உணர்வையும் அனுபவிக்கலாம். 3ஆவது மாடியில் தலைசிறந்த காட்சியரங்கு உள்ளது. உச்ச நிலை கலைப் பொருட்கள் இங்கே அழகியல் தொடர்பான புராணக்கதைகளைக் கூறுகின்றன.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040