லின் ஃபேங்மியன் என்பவர், 20ஆவது நூற்றாண்டு சீன நுண்கலை துறையின் ஆன்மீக தலைவர் என போற்றப்படுகிறார். அவர் புகழ்பெற்ற ஓவிய கலைஞராகவும் நுண்கலை கல்வியியலாளராகவும் திகழ்கிறார். மேலை நாட்டின் ஓவிய பாணியை சீனாவின் பாரம்பரிய ஓவியக் கலையுடன் இணைத்து, கலப்பான புதிய ஓவிய பாணியை உருவாக்கினார். கலைத் துறையில் முழு மனதுடன் ஈடுபட்ட லின் ஃபேங் மியன், 25 வயதில் பெய்பிங் தேசிய கலை கழகத்தின் வேந்தராக பதவியேற்றார். 1928ஆம் ஆண்டு ஹாங் சோ நகரில் அவர் தேசிய கலை கழகத்தை நிறுவி, வேந்தராக பணிபுரிந்தார். ஷாங்காயில் அமைந்துள்ள அவரது முந்தைய இல்லம், சிவப்பு செங்கற்களாலான 2 மாடி கட்டிடமாகும். தற்போது இந்தக் கட்டிடம் பாழடைந்துள்ள போதிலும், பிரமுகர்களின் தோற்றத்தை பார்வையிட விரும்பும் பயணிகளை ஈர்த்து வருகிறது.