புனித நிகோலஸ்(Saint Nicholas) தேவாலயம், ரஷியாவின் பழமை கோட்பாடு தேவாலயக் கட்டிடமாகும். அது ரஷியாவின் கட்டிடக் கலைஞர் ஒருவரின் வடிவமைப்பின் படி 1928ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த சிறிய தேவாலயம் சிறப்பான வடிவில் அழகாகக் காணப்படுகிறது. அதன் இட அமைவு, பைஸன்டியும்(Byzantium) பாணி கட்டிடத்தை மாதிரியாக கொண்டுள்ளது. முன்பு கிழக்கு பகுதியைச் சேர்ந்த பழமை கோட்பாடு கிறிஸ்தவர்கள் இங்கே தங்களது தெய்வபக்தியை வெளிப்படுத்தினர். தற்போது இவ்விடம் வரவேற்கப்பட்ட உணவகமாக மாறியுள்ளது. ஷாங்காயில் தலைசிறந்த பிரெஞ்சு பாணி உணவகமாகவும் அது போற்றப்படுகிறது.