ஃபு சிங் பூங்கா, ஷாங்காய் மாநகரில் மிக முன்னதாக நிறுவப்பட்ட பூங்காக்களில் ஒன்றாகும். முந்தைய கு குடும்பத் தோட்டம், இந்தப் பூங்காவின் ஆரம்ப உருவம். தற்போதைய ஃபு சிங் பூங்காவில் இந்த தோட்டம் ஒரு பகுதியாக இருந்த போதிலும், அதன் வரலாற்று முக்கியத்துவம் அலட்சியம் செய்யப்பட முடியாது. சீராக்கப்பட்ட பின் ஃபு சிங் பூங்கா, ஷாங்காயில் ஒரேயொரு பிரெஞ்சு பாணி பூங்காவாகக் காட்சி அளிக்கிறது. பல்வகை மலர்களும் மரங்களும் இந்தப் பூங்காவில் வளர்கின்றன. இவை பூங்காவின் அழகை அதிகரித்துள்ளன. மேலும், காரல் மார்க்ஸ்(Karl Marx) மற்றும் பிரடிரிக் எங்கல்ஸ்(Friedrich Engels) ஆகிய இருவரின் சிற்பச் சிலைகள் இந்தப் பூங்காவுக்கு பண்பாட்டு வளத்தை வழங்குகின்றன.