லு வான் பிரதேசத்தின் மத்திய ஜியன் குவோ பாதையில் அமைந்துள்ள 8ஆவது இலக்க பாலம், சிறப்பு புத்துணர்வு மண்டலமாகும். 1970ஆம் ஆண்டுகாலத்தில் நிலவிய ஒரு பழைய தொழிற்சாலையிலிருந்து அது வளர்க்கப்பட்டது. அரை ஆண்டுகாலம் மட்டும் செலவிட்டு நிறைவேற்றப்பட்ட இந்த மறுசீரமைப்புத் திட்டப்பணி, பழைய காரணிகளை வைத்திருக்கும் அதேவேளை, நவீன நாகரிகமுடைய புதிய காரணிகளையும் சேர்த்துள்ளது. முந்தைய காலம் தற்காலத்துடன் பாலத்தின் வடிவில் இணைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நவீன நாகரிகம் தொடர்பான புத்துணர்வுகளும் பண்பாட்டு உள்ளடக்கமும் இணைக்கப்பட்டுள்ளன. தியன் ச்சி ஃபாங் மற்றும் 8ஆவது இலக்க பாலம், தங்களது மேம்பாடுகளுடன், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் புகழ்பெற்ற புத்துணர்வார்ந்த நவீன நாகரிக மண்டலமாக மாறியுள்ளன.