ஷாங்காய் அறிவியல் மண்டபம், பண்டைக்கால அழகை நவ நாகரிகமுடன் இணைக்கும் கட்டிடமாகும். 1958ஆம் ஆண்டு ஷாங்காய் அறிவியல் மண்டபம் உருவாக்கப்பட்டது. இம்மண்டபத்தின் முக்கிய பகுதி, 1917ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பிரெஞ்சு பாணி கட்டிமாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிவியல் தொழில் நுட்பப் பரிமாற்றத்துக்கு முக்கிய இடமாக அது அமைகிறது. இந்த மண்டபத்தின் வெளிப்புறத்தை பார்வையிட்டாலும் அதன் உள்புறத்தில் பணிபுரிந்தாலும், பயபக்தியுடன் கூடிய அதன் அழகை உணர்ந்து கொள்ளலாம்.
மேற்கூறிய காட்சித்தலங்களைத் தவிர, ச்சோவ் தௌஃபென் நினைவகம், ச்சாங் சுயேலியாங் இல்லம், சுன் யட்சன் முந்தைய இல்லம், சோ என்லாய் முந்தைய இல்லம் ஆகியவற்றை நீங்கள் பார்வையிடலாம்.