மற்ற சிறப்புகளுக்கெல்லாம் சிறப்பாக விளங்குவது நவ சீனாவின் முதலாவது தலைமை அமைச்சர் ஜுன் லெயின் சொந்த ஊர் ஹுவய் ஆன் என்பதுதான். அதனால் என்னவோ நகர் பெரிதும் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நகரில் அமைக்கப்பட்டுள்ள ஜு என் லெயின் நினைவகம் முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய ஒன்று.
நினைவகத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் ஜு என் லெயின் மாணவ பருவம் முதல் மேற்கத்திய நாடுகளில் கல்வி கற்று தாய் நாட்டுக்குத் திரும்பியது, மேலை நாடுகளில் இருந்தபோது கம்யூனிஸ தத்துவத்தின் மீது ஈர்ப்பு வந்தது, நவ சீனா நிறுவப்பட்ட பின் அவர் ஆற்றிய பங்கு என பல தகவல்களை அறிய முடியும். அருங்காட்சியகத்துக்குள் சென்று பின்னர் வெளியே வந்தால் 1949ஆம் ஆண்டுக்குப் பிறகு சீனாவில் ஏற்பட்ட வளர்ச்சிக்கான காரணத்தை அறியவும் முடியும்.