ஜு என் லே நினைவகத்தைத் தொடர்ந்து, நகரைச் சுற்றி அமைந்துள்ள ஹோங்ஸு ஏரி சுற்றிப் பார்க்க வேண்டிய ஒன்று. அவ்வாறு சென்றால் ஏரியின் அமைதியான தன்மையையும், அதனைச் சுற்றி அமைந்துள்ள வனப் பகுதியில் வசித்து வரும் பறவைகளின் பாடலையும் கேட்டு மகிழலாம். சீனாவில் அமைந்துள்ள ஏரிகளிலேயே மிகவும் சுத்தமான ஏரி என ஹோங்ஸு ஏரி அழைக்கப்படுவது சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்த்துள்ளது. ஏரிகளின் புதையல் என இந்த ஏரி அழைக்கப்படுகிறது. நகரில் நடைபெறும் பல்வேறு போட்டிகள், ஏரியின் அருகில் நடப்பதற்கு ஏரியின் ரம்மியமான சூழலே காரணம்.