• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹுவய் ஆன் நகரம்
  2015-11-24 14:16:59  cri எழுத்தின் அளவு:  A A A   

நவ சீனா நிறுவப்பட்டது முதல் தற்போதுவரை, சீன அமைச்சரவியின் இரண்டு அமைச்சகங்களின் அலுவலகம் ஹுவய் ஆன் நகரில் அமைந்துள்ளது என்று அந்நகர வெளியுறவு அலுவலகத்தின் துணை இயக்குநர் சன் சிங் கூறியது நகரின் முக்கியத்துவத்தை மேலும் உணர்த்துகிறது. ஹுவய் ஆன் நகரில் அதிகமாக ஆறுகளும் ஏரிகளும் அமைந்திருப்பதால் நகரின் ஒட்டுமொத்த வருமானத்தில் விவசாயம் மூன்றில் ஒரு பகுதியை வகிக்கின்றன. அதிலும், தேசிய அளவில் இந்நகர் முக்கியத்துவம் பெறுவதற்கு இயற்கை விவசாயமே காரணம். ஆனால், உலகமயமாக்கல் பிடியில் ஹுவய் ஆன் நகரும் தவறவில்லை. தற்போது அதிக அளவிலான தொழிற்சாலைகள் நிறைந்துள்ளதால், நகரின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதம் தொழிற்சாலைகளின் உற்பத்தியே வகிக்கின்றது.

விருந்தினர்களை உபசரிப்பதில் பிற நகர வாசிகளைப் போலவே, ஹுவய் ஆன் நகரும் விளங்குகிறது. குறிப்பாக, விருந்தின்போது, விருந்தினர்களுக்காக சிறப்பான ஆணையின் பேரில் யேல் எனும் ஒருவகை மீன்களை பரிமாறுவது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். பார்ப்பதற்கு பாம்பைப் போல இருக்கும் இந்த மீனில் அதிக புரோட்டின் உள்ளது நமது பசி உணர்வை மேலும் தூண்டும்.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040