சீனாவில் மிகவும் புகழ்பெற்ற, 16ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட சி யோ ஜி எனும் நாவலை எழுதிய வூ செங் என்னின் சொந்த ஊர் ஹுவய் ஆன். அவரை பெருமைப் படுத்தும் வகையில் நகரில் அவரது தாக்கத்தைக் காண முடியும். சி யோ ஜி என்றால் மேற்கு நோக்கிய புனிதப் பயணம் என்று அர்த்தம். இந்த நாவலில் மிகவும் பிரசத்தி பெற்ற பாத்திரம் குரங்குகளின் அரசன்.