ஹோங் கொவ் பிரதேசத்தில், வடக்கு சிச்சுவான் பாதை, அதன் முக்கிய கிளையான துவோ லுன் பாதையிலுள்ள பண்பாட்டுத் துறை பிரமுகர்கள் வீதி ஆகியவை சாரமான பகுதிகளாகும். வடக்கு சிச்சுவான் பாதையின் தெற்கு முனை, நவ நாகரிகமுடைய சூ சோ ஆற்றின் வடக்கு கரை. அது, வாய்தான், லு ஜியா ச்சுய் ஆகிய இடங்களுடன் சேர்ந்து, வெண்தங்க முக்கோண பகுதியாக உருவானது. உயர் நிலை வணிகச் சூழ்நிலை இல்லை என்ற போதிலும் இப்பகுதி சிறப்பாக உள்ளது. வடக்கு சிச்சுவான் பாதையின் நடுப்பகுதி, உயிரின வாழ்க்கைச் சூழல் வணிகத்துடன் இணையும் சிறந்த முன்மாதிரியாகும். மிக விறுவிறுப்பாக உள்ள இந்தப் பகுதியின் போக்குவரத்தும், வணிகச் சூழலும் வடக்கு சிச்சுவான் பாதைக்கு சிறப்பான வணிக நறுமணத்தை வழங்குகின்றன. பண்பாட்டு பொழுதுபோக்கினால் வணிகத்தைத் தூண்டும் வடக்கு பகுதி, துவோ லுன் வீதி, ஷான் இன் வீதி, தியன் ஐ வீதி, லி யாங் வீதி உள்ளிட்ட பண்பாட்டு வளமிக்க வீதிகளின் மூலம் தனது பண்பாட்டு அடிப்படையை உருவாக்கியுள்ளது.
1 2 3 4 5 6 7