பு ஜியாங் உணவு விடுதி, சுமார் 160 ஆண்டுகால வரலாறு உடையது. ஒன்றரை நூற்றாண்டைக் கடந்து சென்ற அது, வரலாற்றைப் பதிவு செய்யும் சின்னம் போல், ஹுவாங் பு ஆற்றங்கரையில் நிமிர்ந்து நிற்கிறது. அதன் மூலம், ஷாங்காயில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். முன்பு Richard உணவு விடுதி என அழைக்கப்பட்ட அது, 1846ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. அப்போது, அதன் அழகான பரோக் பாணி பொது மக்களின் கவனத்தை ஈர்த்து, வியப்பையும் பாராட்டுக்களையும் ஏற்படுத்தியது. 1907ஆம் ஆண்டு இந்த உணவு விடுதி விரிவாக்கப்பட்டது. அதற்குப் பின் பிரிட்டனின் மேற்கத்திய பழமை வாய்ந்த பாணியுடைய கட்டிடமாக அது மாறியது. 2002ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்ட பின், நீண்ட வரலாறுடைய இந்த உணவு விடுதி, மங்கையர் உயிராற்றலை வெளிப்படுத்துகிறது. மேலும், நவீன பண்பாட்டுப் பொருட்களின் பயன்பாட்டில் இந்த உணவு விடுதி முன்னோடியாக உள்ளது.