ஜிங் லிங் தேவாலயம், கிறிஸ்தவ தேவாலயமாகும். 1882ஆம் ஆண்டு அமெரிக்காவின் சமய பிரசாரகர் ஜான் ஏலன் சீன-மேலை கழகத்தில் நிறுவிய வழிபடுமிடம், இந்த தேவாலயத்தின் மூல வடிவமாகும். 1924ஆம் ஆண்டு கழகத்தின் எதிர்ப்பக்கத்தில் புதிய வழிபடுமிடம் கட்டப்பட்டது. அது ஜிங் லின் தேவாலயம் என அழைக்கப்பட்டது. 1980ஆம் ஆண்டு ஜிங் லின் தேவாலயத்துக்கு, ஜிங் லிங் தேவாலயம் என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது. முன்பு ஷாங்காயில் மிகப் பெரிய வழிபடுமிடமாக இருந்த இந்த தேவாலயம், கம்பீரமான காட்சி அளிக்கவில்லை எனினும், பல நம்பிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. சுற்றுலாப் பயணி கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர் அல்ல என்றாலும், இந்த தேவாலயத்தில் இறைப்பாட்டைக் கேட்டு களித்து, நம்பிக்கை ஏற்படுத்தும் ஆற்றலை உணர்ந்தால் நன்றாக இருக்கும்.