ஜி-20 உச்சி மாநாடு இவ்வாண்டு சீனாவின் ஹாங்ட்சோ நகரில் நடைபெறவுள்ளது. இவ்வுச்சி மாநாடு, சீனாவில் நடத்தப்படும் மிக முக்கிய வெளியுறவு நிகழ்வாகவும், உலகின் மிக அதிக கவனத்தை ஈர்க்கும் பொருளாதார மாநாடாகவும் விளங்குகிறது.
இதற்கிடையில், நடப்பு மாநாட்டின் நிகழ்ச்சி நிரல்களை பன்முகங்களிலும் முன்னேற்றும் அதேசமயம், மூன்று புதிய கோணத்திலிருந்து ஜி-20 மாநாட்டில் முன்னேற்றம் அடைவதற்கு சீனா முயற்சி எடுக்கும். அதாவது, புத்தாக்கம் செய்வதன் மூலம் புதிய உந்து ஆற்றலைக் கண்டுபிடிப்பது, சீர்திருத்தம் மேற்கொள்வதன் மூலம் புதிய உயிராற்றலை ஊட்டுவது, வளர்ச்சி பெறுவதன் மூலம் புதிய எதிர்காலத்தை உருவாக்குவது ஆகியவை உள்ளடக்கம் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங்யி 8ஆம் நாள் தெரிவித்தார்.