வணக்கம் நேயர்களே. லியங்ஹுய் என்ற கூட்டத்தொடர்கள் சீனாவில் நடைபெற்றுகொண்டிருக்கிறன. இது பற்றி ஒரு புதிய அறிவுப் போட்டியை நடத்துகிறோம். சீனாவில் லியங்ஹுய் என்ற கூட்டத்தொடர்கள் பற்றிய மூன்று கேள்விகளை உங்களிடம் கேட்கப் போகிறோம். இந்த கேள்விகளின் பதில், நமது இணையத்தளத்தின் லியங்ஹுய் பகுதியிலுள்ள ஒரு கட்டுரையில் இருக்கிறது. நீங்கள் சரியாக இதை கண்டறியுங்கள். மின்னஞ்சல் மூலம் சரியான பதில்களை அனுப்பும் முதல் 10 நேயர்களுக்கு சிறந்த பரிசுப் பொருட்களை ஏற்பாடு செய்வோம்.
முதல் 2 கேள்விகளுக்கு ஒரே ஒரு பதில் தேர்ந்தெடுங்கள். 3வது கேள்விக்கு பல பதில்களைத் தேர்ந்தெடுங்கள். மின்னஞ்சல் மூலம், உங்கள் கருத்தில் சரியான பதில்களை எங்களுக்கு அனுப்புங்கள். tamil@cri.com.cn உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்.
1, சீனாவின் லியங்ஹுய் என்ற கூட்டத்தொடர்களின் முழு பெயர் என்ன?
அ: சீனாவின் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசிய கமிட்டியின் ஆண்டுக் கூட்டத் தொடர்கள்
ஆ: சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கூட்டத்தொடர் மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசிய கமிட்டியின் ஆண்டுக் கூட்டத் தொடர்கள்
இ: சீனாவின் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கூட்டத்தொடர்.
2, எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த இருக் கூட்டத்தொடர்கள் நடைபெறும்?
அ: ஆண்டுக்கு ஒரு முறை
ஆ: இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை
இ: நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை
3, இவ்வாண்டில் நடைபெறுகின்ற இரு கூட்டத்தொடர்களின் எந்த அம்சங்கள் விவாதிக்கப்படுகிறது?
அ: சீனத் தயாரிப்பு 2025
ஆ: இணையம்+
இ: தொழில் தொடங்குதல், புதிதாக உருவாக்குதல்