• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாரம்பரிய மருத்துவ ஆய்வில் ஹேபெயின் யீலிங்க் நிறுவனம்
  2017-05-09 09:12:37  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் பெருமைமிக்க மருத்துவ ஆய்வு நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் இந்த நிறுவனம் 1992 ஆம் ஆண்டு பேராசிரியர் வூ யீலிங்க் என்பவரால் தொடங்கப்பட்டது ஆகும். சீனாவின் பாரம்பரிய மருத்துவம் தொடர்பான ஆய்வு மையம், மருந்து தயாரிப்புப் பகுதி, தங்கள் உடல்நலத்தை இயற்கையான முறையில் காத்துக் கொள்ள விரும்பும் மக்களுக்காக ஒரு லட்சத்து நாற்பதாயிரம் சதுர மீட்டர் அளவு கொண்ட கட்டிடம் என மிக நவீன வசதிகளுடன் யீலிங்க் ஆய்வு நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் தயாரிக்கும் சீனாவின் பாரம்பரிய மருந்துகள் தென் கொரியா, வியட்நாம், இங்கிலாந்து, கனடா, நெதர்லாந்து, சிங்கப்பூர், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் மூலம் மட்டும் இந்நிறுவனம் 500 கோடி யுவான் வருமானம் ஈட்டுகின்றது. இதயச் செயலிழப்பை சீனப் பாரம்பரிய மருத்துவத்தின் வழி தடுப்பது எப்படி? என்று இந்த நிறுவனத்தின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வானது, அமெரிக்காவில் இருந்து வெளிவரும், மருத்துவத் துறையின் புகழ்பெற்ற ஆய்விதழான இதயவியல் துறைக்கான அமெரிக்கன் கல்லூரியின் ஆய்விதழில் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1  2  3  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040