சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சீனாவில் நடைபெறும் சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் மன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பாகிஸ்தான் தலைமையமைச்சர் நவாஸ் ஷெரீபை, மே 13ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்துரையாடினார். சீனத் தூதாண்மை உறவில், சீன-பாகிஸ்தான் உறவுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இரு நாட்டுப் பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளி உறவின் உள்ளடக்கங்களைச் செழிப்பாக்க சீனா விரும்புகிறது. சீன-பாகிஸ்தான் பொருளாதார மண்டலத்தின் உருவாக்கத்தை இரு தரப்பும் முன்னேற்றி, போக்குவரத்து அடிப்படை வசதிகளின் கட்டுமானம், எரியாற்றல், மக்களின் வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளைச் செயல்படுத்த வேண்டும் என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.