சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற மன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள ஐ.நா தலைமைச் செயலாளர் குட்ரெஸ், சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் ஆகியோர் 15-ஆம் தேதி பிற்பகல் சந்திப்பு நடத்தினர். ஐ. நா உள்ளிட்டவை மூலம், 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சி நிரலை பயன் முறையில் செயல்படுத்தவும், உலகின் அமைதி மற்றும் வளர்ச்சியை முன்னேற்றவும் பொறுப்புக்குரிய பெரிய நாடான சீனா தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும் என்று லீக்கெச்சியாங் தெரிவித்தார்.