எரியாற்றல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் உயிர் நாடியாகும். கடந்த 5 ஆண்டுகளாக, புதிய எரியாற்றலை சீனா பெரிதும் வளர்த்து, பயன்படுத்தி, தூய்மையான, கரிகுறைந்த எரியாற்றலுக்கான மாற்றத்தை விரைவுப்படுத்தியுள்ளது. இதன் மூலம், சீனாவின் பொருளாதார அதிகரிப்புத் தரம் இடைவிடாமல் மேம்பட்டுள்ளது. அதனுடன் மக்கள் மேலதிக பயன்களைப் பெற்று வருகின்றனர்.
நாள்தோறும் காலை, பெய்ஜிங் நகரவாசியான சாங் அம்மையார், பகிர்வு மிதிவண்டியின் மூலம் வீட்டிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்திலுள்ள தரைக்கடி தொடர்வண்டி நிலையத்துக்கு செல்கிறார். அதற்குப் பிறகு, சுரங்க பாதையின் மூலம், வேலைக்கு பயணிக்கிறார். அவர் கூறுகையில்,