• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் தூய்மையான எரியாற்றல் வளர்ச்சி
  2017-06-26 16:14:59  cri எழுத்தின் அளவு:  A A A   

முதலாவதாக, பகிர்வு போக்குவரத்து மிகவும் வசதி. செல்லிடப்பேசியின் மூலம் QR குறியீடை வருடி செய்து, மிதிவண்டியைப் பயன்படுத்த முடியும். இரண்டாவதாக, செலவு மிகவும் குறைவு, ஐந்து ஜியாவ் அல்லது ஒரு யுவானை போதும். மூன்றாவதாக மிதிவண்டியைப் பயன்படுத்துவது ஓர் உடற்பயிற்சி. மேலும், போக்குவரத்து நெரிசல் பற்றி கவலைப்பட தேவையில்லை என்று கூறினார்.

இவ்வாண்டின் மே திங்கள் வரை, சீனாவின் பல்வேறு இடங்களில் செயலுக்கு வந்துள்ள பகிர்வு மிதிவண்டிகளின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேலாகும். அவற்றின் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ளது. இணையம் பிளஸ்(plus) தூய்மையான போக்குவரத்து வழியில், நடமாட்ட எரியாற்றல் முக்கிய பங்கு ஆற்றியுள்ளது. ஒரு வகை மிதிவண்டியில்மெல்லிய தகுடுகளால் ஆன சூரிய ஆற்றல் மின்கலம் பொருத்தப்பட்டுள்ளது. மிதிவண்டி பூட்டிலுள்ள GPSக்கு தூய்மையான எரியாற்றலை இது இடைவிடாமல் வழங்கும்.

போக்குவரத்துத் துறையிலும், கொள்கைகளின் ஆதரவுடனும், தொழில் நுட்பத்தின் வளர்ச்சியுடனும், சீனாவின் புதிய எரியாற்றல் வாகனத் துறை மென்மேலும் விரைவாக வளர்ந்து வருகிறது. புள்ளிவிபரங்களின்படி, 2016ஆம் ஆண்டு, சீனாவின் புதிய எரியாற்றல் வாகனங்களின் உற்பத்தி எண்ணிக்கையும், விற்பனை எண்ணிக்கையும் 5 இலட்சத்தைத் தாண்டியுள்ளன. உலகில் இது முதலிடம் வகிக்கிறது. எண்ணெய் பயன்படுத்தும் வாகனத்துடன் ஒப்பிடுகையில், மின்சாரத்தைப் பயன்படுத்தும் வாகனங்கள் கரியமில வாயுவை வெளியிடுவதில்லை.

தற்போது, எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் மதிப்பு மற்றும் சோதனையை சீனா வலுப்படுத்தி, எரியாற்றலுடன் தொடர்புடைய சட்டத்தை மேம்படுத்தி வருகிறது. உற்பத்தி வழிமுறையை தூய்மையாக்கி, தூய்மையான, கரிகுறைந்த நுகர்வு வழிமுறையை உருவாக்குவதை இவை வெளிக்காட்டுகின்றன.


1  2  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040