புதிய "மெஜஸ்டிக் பிரின்செஸ்" எனும் சுற்றுலாக் கப்பல், பண்டைகாலத்தில் கடல் வழி பட்டுப் பாதையின் முக்கிய துறைமுகமாக விளங்கிய சீனாவின் சியாமன் நகரை ஜூன் திங்கள் 26ஆம் நாள் விடியற்காலை அடைந்தது. மே திங்கள் 21ஆம் நாள் முதல், இத்தாலியின் தலைநகர் ரோமிலிருந்து புறப்பட்டு, கடல் வழி பட்டுப் பாதையில் சுமார் 37 நாட்கள் பயணம் மேற்கொண்ட பிறகு, சீனாவின் துறைமுகத்தை அடைந்தது இதுவே முதல்முறை.
சீனாவின் வெளிநாட்டு நட்புறவுச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள கடல் வழி பட்டுப் பாதையின் மூலம், சீனக் கதையை அறிந்துகொள்வது என்ற சிறப்பு நிகழ்ச்சி இது வரை வெற்றிகரமாக நிறைவடைந்தது. பட்டுப் பாதையின் எழுச்சி மற்றும் பண்பாடு, உலகில் பல்வேறு பிரதேசங்களிலுள்ள சுற்றுலா பயணிகளின் மனதில் சிறப்பான தகுநிலையை வகிக்கிறது.