ஜூன் 25ஆம் நாள் பிற்பகல், இந்நிகழ்ச்சியின் சீனப் பிரதிநிதிகள், சுற்றுலாக் கப்பலின் முக்கிய பொறுப்பாளர்கள், சீன கை எழுத்து மற்றும் ஓவியத் துறை மற்றும் செய்திஊடகங்களின் விருந்தினர்கள், இச்சுற்றுலா கப்பலில் ஒன்று திரண்டு, பயணிகளுடன் சேர்ந்து, ஈர்ப்பு மிகுந்த பண்பாடு மற்றும் நட்புறவுப் பயணத்தை மீளாய்வு செய்தனர். சீனத் தேசிய நட்புறவு சங்கத்தின் அரசுச் சாரா நெடுநோக்கு ஆராய்ச்சி மையத்தின் தலைவர் லீ சின் யூ கூறியதாவது
கடந்த 37 நாட்களில், இப்பயணத்தின் மூலம், சீனக் கதைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். இசை, நடனம், பட்டுப் பாதை தொடர்பான கதைகள், தேயிலை பண்பாடு மற்றும் பல்வகை அம்சங்கள் வாய்ந்த பிரச்சாரங்களை 5 கலை குழுக்கள் வழங்கின. இதன் வழி, இச்சுற்றுலா கப்பலில் பயணித்த ஏறக்குறைய 7000 பயணியர்கள், சீனா பற்றி புதிதாக அறிந்துகொண்டனர். இத்தகைய நிகழ்ச்சிகளை அவர்கள் காண்பது இதுவே முதல்முறை. இதனால் மிகவும் இன்ப அதிர்ச்சியுற்றனர் என்று பலர் தெரிவித்ததாக லீ சின் யூ கூறினார்.
இப்பயணம் மேற்கொள்வதற்கு முன்பு, சீனா தொடர்பான தகவல்களை அறிந்துகொண்டது மிகவும் குறைவுதான். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு பற்றி அறிந்திருக்கவில்லை. இப்பயணத்தின் மூலம், இது தொடர்பான புதிய தகவல்களை அறிந்துகொண்டேன் என்று இந்த பயணத்தின் பண்பாட்டு நிகழ்ச்சிக்கான பொறுப்பாளர் கசெலின் தெரிவித்தார்.
இச்சுற்றுலா கப்பல், இத்தாலியிலிருந்து புறப்பட்டு, கிரேக்கம், எகிப்து, ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், சீனா ஆகிய கடல் வழி பட்டுப் பாதையின் நெடுகிலுள்ள 12 நாடுகள் வழியாக பயணித்தது. ஆயிரக்கணக்கான சர்வதேச சுற்றுலாப் பயணிகள் ஈர்ப்பு மிக்க சீனப் பண்பாட்டை அனுபவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.