சீனத் தேசிய புள்ளிவிபரப் பணியகம் 17ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி, இவ்வாண்டின் முற்பாதியில் சீன உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பு 38 லட்சத்து 14 ஆயிரத்து 900 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதேகாலத்தில் இருந்ததை விட 6.9 விழுக்காடு அதிகரித்தது. வேளாண் துறை, தொழில்துறை மற்றும் சேவை துறையின் கூட்டு மதிப்பு, முறையே 3.5, 6.4 மற்றும் 7.7 விழுக்காடு அதிகரித்தது.