பாகிஸ்தான் தலைமையமைச்சர் ஷாஹித் ககான் அப்பாசி, பாகிஸ்தானின் தேசிய சுதந்திர தினத்தின் 70வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட நடவடிக்கையில் கலந்து கொண்ட சீனத் துணைத் தலைமையமைச்சர் வாங்யாங்கை, ஆகஸ்டு 13ஆம் நாள் இஸ்லாமாபாதில் சந்தித்துரையாடினார். சீன-பாகிஸ்தான் நாடுகளின் பயன் தரும் ஒத்துழைப்பு குறித்து, இரு தரப்பும் ஆழமாக கருத்துக்களைப் பரிமாறி, ஒத்த கருத்தை எட்டியுள்ளன.