சீனாவும் பாகிஸ்தானும் எப்போதும் ஒன்றுக்கொன்று புரிந்துணர்வையும் ஆதரவையும் அளித்து வருகின்றன. பாகிஸ்தானுடன் இணைந்து, இரு நாட்டு ஒத்துழைப்பு மேலதிக சாதனைகளைப் பெறுவதை முன்னேற்றி, இரு நாடுகளின் மக்களுக்கு நன்மை புரிய சீனா விரும்புகிறது என்று வாங்யாங் தெரிவித்தார்.
அப்பாசி பேசுகையில், கடந்த சில ஆண்டுகளாக, பாகிஸ்தான் பொருளாதார வளர்ச்சியில், சீனாவின் ஆதரவு முக்கிய பங்காற்றியுள்ளது. சீனாவுடன் இணைந்து, சீன-பாகிஸ்தான் பொருளாதார மண்டலத்தின் ஆக்கப்பணியை முன்னேற்ற பாகிஸ்தான் விரும்புகிறது என்றார் அவர். (பூங்கோதை)