• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் புகழ் பெற்ற உயர் கல்வி நிலையங்கள்]
சீன உயர் கல்வி நிலையங்கள்

கடந்த சில ஆண்டுகளில் அரசு உயர் கல்வி நிலையங்கள் புதிதாக மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் அளவு விரிவாகி வருகின்றது. தற்போது சீனாவின் உயர் கல்வி நிலையங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை, 2 கோடியை எட்டியுள்ளது. உயர் கல்வி நிலையங்களுக்கான நுழைவு விகிதம், 17 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

தற்போது, சீனாவில் சுமார் 3000 உயர் கல்வி நிலையங்கள் உள்ளன. இவற்றில் 1300 சாதாரண உயர் கல்வி நிலையங்களும், 1200 அரசு சாரா உயர் கல்வி நிலையங்களும் இடம்பெறுகின்றன. தவிர, வயதுவந்தோருக்கான உயர் கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. சீன உயர் நிலைக் கல்வி, டிப்ளமோ, பட்டம், முதுகலை, முனைவர் பட்டம் ஆகிய நிலைகளில் அமைகின்றது.

தற்போது, மதிப்பீட்டு முறை நடைமுறைப்படுத்தப்படுகின்றது. டிப்ளமோ மாணவர்கள் 3 ஆண்டு கல்வி பயில்கின்றனர். பட்ட வகுப்பு மாணவர்கள் 4 ஆண்டு கற்கின்றனர். முதுகலை வகுப்பு மாணவர்கள், முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் ஆகியோர் 2-3 ஆண்டு பயில்கின்றனர்.

சீன உயர் கல்வி நிலையங்கள், அரசு உயர் கல்வி நிலையங்களை முக்கியமாகச் சார்ந்துள்ளன. ஆய்வுத் தன்மை மற்றும் பன்நோக்கத் தன்மை வாய்ந்த பல்கலைக்கழகங்கள், அரசு சாதாரண உயர் கல்வி நிலையங்களில் செறிந்திருக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளில், அரசு சாரா உயர் கல்வி நிலையங்கள், விரைவாக வளர்ச்சியுற்று வருகின்றன. இவற்றில் சில அளவில் பெரியவை. ஆனால், கல்வித் தரத்தை பொறுத்த வரை, இவற்றுக்கும் அரசு உயர் கல்வி நிலையங்களுக்குமிடையில் குறிப்பிடத்தக்க இடைவெளி நிலவுகிறது.

1 2 3 4 5 6 7 8 9 10 11
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040