ஸே சியாங் பல்கலைக்கழகம்

ஸே சியாங் பல்கலைக்கழகம், சீனாவின் ஸே சியாங் மாநிலத்து ஹாங் செள நகரில் அமைந்துள்ளது. தற்போது, சீனாவில் அளவில் மிகப் பெரிய, துறைகள் மிக முழுமையான ஆய்வுத் தன்மை மற்றும் பன்நோக்கத் தன்மை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இது, உலகில் குறிப்பிடத்தக்க உயர் செல்வாக்கு பெற்றுள்ளது.
11 துறைகளைச் சேர்ந்த 108 சிறப்புத்துறைகள் இடம்பெறுகின்றன.
தற்போது, இப்பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் ஊழியர் ஆகியோரின் எண்ணிக்கை சுமார் 8700 ஆகும். 40 ஆயிரம் முழு நேர மாணவர்களில், 9700 முதுகலை பட்ட மாணவர்களும் 4200 முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களும், 1000 அன்னிய மாணவர்களும் இருக்கின்றனர்.
பொருளியல், சட்டவியல், அறிவியல் உள்ளிட்ட சிறப்புத்துறைகளில் குறிப்பிடத்தக்க கல்வியியல் சாதனையை இப்பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. அதன் நூலகங்களின் பரப்பளவு சுமார் 59 ஆயிரம் சதுர மீட்டராகும். 59 லட்சத்து 10 ஆயிரம் நூற்கள் இவற்றில் இருக்கின்றன.

இப்பல்கலைக்கழகத்தை மேலும் அறிந்து கொள்ள http://www.zju.edu.cn/ ஐ காண்க.
1 2 3 4 5 6 7 8 9 10 11