• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் புகழ் பெற்ற உயர் கல்வி நிலையங்கள்]

பெய்ஜிங் பல்கலைக்கழகம்

பெய்ஜிங் பல்கலைக்கழகம் 1898ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. பன்நோக்கத் தன்மை வாய்ந்த அரசு பல்கலைக்கழகம் இது. கலைத் துறை, அறிவியல் துறை ஆகியவற்றில் உயர் கல்வி மற்றும் ஆய்வு நிலையினால், சீனாவில் புகழ் பெற்றது. சீனாவில் மிகவும் நீண்டகால வரலாறுடைய பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்றாகும்.

நூறு ஆண்டு வளர்ச்சி மூலம், தற்போது, பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் கலை, சமூக அறிவியல், இயற்கை அறிவியல், தகவல் மற்றும் பொறியியல், மருத்துவம் ஆகிய ஐ.ந்து புலங்கள், 42 கல்லூரிகள் மற்றும் துறைகள், 216 ஆய்வகங்கள், 18 துணை மற்றும் பாடம் கற்பிக்கும் மருத்துவ மனைகள் ஆகியவை இடம்பெறுகின்றன. சீன மொழி, மேலை நாட்டு மொழி, வரலாறு, இயற்பியல், உயிரியல் ஆகிய சிறப்புத்துறைகளால் இது புகழ் பெற்றுள்ளது.

தற்போது, இப்பல்கலைக்கழகத்தில் சாதாரண டிப்ளமோ மாணவர்கள், பட்ட வகுப்பு மாணவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை 15 ஆயிரம் ஆகும். முதுகலை வகுப்பு மாணவர்கள், முனைவர் டாக்டர் பட்ட ஆய்வு மாணவர்கள் ஆகியோரின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரமாகும். வெளிநாட்டு மாணவர்கள் பலரின் கவனத்தை இப்பல்கலைக்கழகம் ஈர்த்துள்ளது. அதன் நூலகமானது, ஆசியாவில் மிகப் பெரியது. இதில் சுமார் 62 லட்சத்து 90 ஆயிரம் நூல்கள் உண்டு. இப்பல்கலைக்கழகம் பற்றி மேலும் அறிந்து கொள்ள, http://www.pku.edu.cn/ ஐ காண்க.

1 2 3 4 5 6 7 8 9 10 11
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040