பெய்ஜிங் ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகம்

பெய்ஜிங் ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகம், 1902ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது; சீனாவின் முதலாவது ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகமாகும். இது புகழ் பெற்ற ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகமாகும்; பல்வகை ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் முக்கிய தளமுமாகும்.
இப்பல்கலைக்ழகத்தில், கல்வியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, சீன மொழி மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, உளவியல் கல்லூரி உள்ளிட்ட 15 கல்லூரிகள், 48 பட்டதாரித் துறைகள் ஆகியவை இடம்பெறுகின்றன. இதன் கல்வியியல், உளவியல், பாலர் கல்வி ஆகியவை சீனாவில் செல்வாக்கு பெற்றவை.
தற்போது, இப்பல்கலைக்கழகத்தின் கல்விசார் மற்றும் நிர்வாகப் பணியாளர் எண்ணிக்கை 2500 ஆகும். மாணவர் எண்ணிக்கை 20 ஆயிரம் ஆகும். இதில் முழு நேர பட்ட வகுப்பு மாணவர் எண்ணிக்கை சுமார் 7 ஆயிரம் ஆகும். அன்னிய மாணவர் எண்ணிக்கை ஓராயிரமாகும்.

கடந்த சில ஆண்டுகளில், ஆசிரியர் பயிற்சி சாரா சிறப்புத்துறைகளையும் வளர்ச்சியடையச்செய்துள்ளது. கல்வி நிர்வாக மூலவளத்திலான மேம்பாட்டை முழுமையாகப் பயன்படுத்தி, ஆசிரியர்கள் ஊழியர்கள் ஆகியோருக்கான பணிப் பயிற்சியை இது நடத்தியுள்ளது. இப்பல்கலைக்கழகம் பற்றி மேலும் அறிந்து கொள்ள, http://www.bnu.edu.cn/ ஐ நாடுக!
1 2 3 4 5 6 7 8 9 10 11