பு தான் பல்கலைக்கழகம்

ஷாங்காய் மாநகரில் அமைந்துள்ள இப்பல்கலைக்கழகம், சீனாவில் கலைத் துறை மற்றும் இயற்கை அறிவியல் துறை தலைசிறந்து விளங்கும் மிகவும் புகழ் பெற்ற பன்நோக்கப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.
தற்போது, இப்பல்கலைக்கழகத்தில், கலையியல், சமூக அறிவியல் , இயற்கை அறிவியல், தொழிற்நுட்பம், நிர்வாக அறிவியல், மருத்துவ அறிவியல் உள்ளிட்ட பல சிறப்புத்துறைகள் இடம்பெறுகின்றன. அன்னிய மொழிகள் கல்லூரி, இதழியல் துறை, ஷாங்காய் மருத்துவக் கல்லூரி, மென் பொருள் பள்ளி உள்ளிட்ட 15 முழு நேர கல்லூரிகள், 72 துறைகள், 65 ஆய்வு நிறுவனங்கள், 91 பல்துறை ஆய்வு மையங்கள் ஆகியவை இடம்பெறுகின்றன. தற்போது, உலகில் செல்வாக்கு பெற்ற கல்வியியல் மையங்களில் ஒன்றாக இப்பல்கலைக்கழகம் மாறியுள்ளது. சுமார் 30 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 200க்கு அதிகமான உயர் கல்வி நிலையங்கள் ஆய்வு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் ஒத்துழைப்பையும் மற்றும் பரிமாற்றத்தையும் உருவாக்கியுள்ளது.

இங்கு கல்வி பயிலும் முழு நேர மாணவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரமாகும். அன்னிய மாணவர்களின் எண்ணிக்கை 1650 ஆகும். இப்பல்கலைக்கழகம் பற்றி மேலும் அறிந்து கொள்ள, http://www.fudan.edu.cn/ ஐ நாடலாம்.
1 2 3 4 5 6 7 8 9 10 11