சி சுவான் பல்கலைக்கழகம்

சி சுவான் பல்கலைக்கழகம், Si Chuan மாநிலத்தின் செங்டு நகரிலுள்ளது. தற்போது சீனாவின் மேற்குப் பகுதியில், சிறப்புத்துறைகள் மிக முழுமையான, அளவில் மிகப் பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். தற்போது, கலையியல், சமூக அறிவியல், இயற்கை அறிவியல், பொறியியல் தொழில் நுட்ப அறிவியல், மருத்துவம் உள்ளிட்ட 9 துறைகளில் கல்வி மற்றும் ஆய்வு நடவடிக்கை நடைபெறுகிறது.

தற்போது, 30 கல்லூரிகளைச் சேர்ந்த 118 சிறப்புத்துறைகள் இது உருவாக்கியுள்ளன. கல்விசார் & நிர்வாகப் பணியாளர் எண்ணிக்கை 11357 ஆகும். இப்பல்கலைக்கழகத்தில் மாணவர் எண்ணிக்கை 43.9 ஆயிரமாகும். இதில் முழு நேர பட்ட வகுப்பு மாணவர் எண்ணிக்கை சுமார் 30 ஆயிரமாகும். முதுகலை பட்ட மாணவர், சிறப்பு பட்ட ஆராய்ச்சி மாணவர் ஆகியோரின் எண்ணிக்கை 10 ஆயிரமாகும். முனைவர் பட்ட ஆய்வு மாணவர் எண்ணிக்கை 2740 ஆகும். வெளிநாட்டு மாணவர், ஹாங்காங் மக்கௌ தைவான் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர் ஆகியோரின் மொத்த எண்ணிக்கை 653 ஆகும். இப்பல்கலைக்கழகத்தை மேலும் அறிந்து கொள்ள, http://www.scu.edu.cn/ ஐ நாடலாம்.
1 2 3 4 5 6 7 8 9 10 11