வூ ஹான் பல்கலைக்கழகம்

வூ ஹான் பல்கலைக்கழகம், சீனாவின் ஹு பே மாநிலத்தின் Wu Han நகரிலுள்ளது. சீனாவில் மிக முழுமையான துறைகளைக் கொண்ட ஆய்வுத் தனமை மற்றும் பன்நோக்கத் தன்மை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்றாகும். தற்போது, இப்பல்கலைக்கழகத்தில் தத்துவம், பொருளியல், சட்டம், கல்வியியல், இலக்கியம், வரலாறு, அறிவியல், பொறியியல், மருத்துவ அறிவியல் உள்ளிட்ட 11 துறைகளைச் சேர்ந்த 105 சிறப்புத் துறைகள் இடம்பெறுகின்றன. சுமார் 5000 ஆசிரியர்கள் இங்குப் பணி புரிகின்றனர். மாணவர் எண்ணிக்கை சுமார் 45 ஆயிரமாகும். இதில் ஆராய்ச்சி மாணவர் எண்ணிக்கை சுமார் 12 ஆயிரமாகும். கடந்த சில ஆண்டுகளில், சுமார் 300 புகழ் பெற்ற அன்னிய அறிவாளர், செல்வாக்கு பெற்ற அரசியல் வட்டாரப் பிரமுகர்கள் ஆகியோரை பகுதி நேர பேராசிரியர், கெளரவப் பேராசிரியர் அல்லது வருகை தரு பேராசிரியராக நியமித்துள்ளது. 60க்கு அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 200 பல்கலைக்கழகங்கள், அறிவியல் ஆய்வு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் ஒத்துழைப்பையும் பரிமாற்றத்தையும் இது மேற்கொண்டுள்ளது.

லுவோ ஜியா மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இப்பல்கலைக்கழக வளாகம், சீனாவிலுள்ள மிக அழகான வளாகங்களில் ஒன்றாகும். இப்பல்கலைக்கழகத்தை மேலும் அறிந்து கொள்ள நாடுக: http://www.whu.edu.cn/
1 2 3 4 5 6 7 8 9 10 11