• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் புகழ் பெற்ற உயர் கல்வி நிலையங்கள்]

சிங் ஹுவா பல்கலைக்கழகம்

பெய்ஜிங்கில் அமைந்துள்ள Qing Hua பல்கலைக்கழகம், சீனாவில் அறிவியல் மற்றும் பொறியியல் துறைகள் தலைசிறந்து விளங்கும் மிகவும் புகழ் பெற்ற ஆய்வுத் தன்மை மற்றும் பன்னோக்கத் தன்மை வாய்ந்த அரசு பல்கலைக்கழகமாகும். இது, சுமார் 100 ஆண்டு வரலாறுடையது. தற்போது, சீனாவில் உயர் நிலை திறமைசாலிகளைப் பயிற்றுவிக்கும் மிக முக்கியமானவற்றில் ஒன்றாகும்.

தற்போது, இப்பல்கலைக்கழகத்தில் அறிவியல், கட்டிடக்கலை, பொறியியல் முதலான 11 கல்லூரிகளைச் சேர்ந்த 44 துறைகள் இடம்பெறுகின்றன. இதன் கட்டிடக்கலை, கணிணி, கார், உயர் ஆற்றல் இயற்பியல் ஆகிய சிறப்புத்துறைகள் சீனாவில் செல்வாக்குடையவை. நிர்வாகம், சீன மொழி, இதழியல் உள்ளிட்ட சமூக அறிவியல் சிறப்புத்துறைகளை இப்பல்கலைக்கழகம் அதிகரித்துள்ளது. மருத்துவக் கல்லூரியை நிறுவுவதற்கான ஆயத்தப் பணி மேற்கொள்கின்றது.

தற்போது, இப்பல்கலைக்கழகத்தில் சுமார் 7100 கல்விசார் மற்றும் நிர்வாகப் பணியாளர் இருக்கின்றனர். இப்பல்கலைக்கழகத்தில் பயிலும் முழு நேர மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 20 ஆயிரமாகும். இதில், பட்ட வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 12 ஆயிரமாகும். முதுகலை வகுப்பு மாணவர்கள், முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை சுமார் 10 ஆயிரமாகும். அன்னிய மாணவர்கள் பலர் இப்பல்கலைக்கழகத்தில் பயில்கின்றனர்.

உயர் கல்வியியல் மற்றும் போதனை நிலையினால் இப்பல்கலைக்கழகம் மிகவும் புகழ்பெற்றுள்ளது. இது, உலகில் உயர் செல்வாக்கு பெற்றது. இப்பல்கலைக்கழகத்தை மேலும் அறிந்து கொள்ள, http://www.tsinghua.edu.cn ஐ காணலாம்.

1 2 3 4 5 6 7 8 9 10 11
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040