ஸோங் ஷான் பல்கலைக்கழகம்

ஸோங் ஷான் பல்கலைக்கழகம், சீனாவின் குவாங் துங் மாநிலத்து குவாங் சோ நகரில் அமைந்துள்ளது; கலைத் துறை, அறிவியல் துறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பன்நோக்கப் பல்கலைக்கழகமாகும். 1924ஆம் ஆண்டில் சீன ஜனநாயக புரட்சியின் தலைவர் சுன் யட் சன்னினால், இது நிறுவப்பட்டது.
தற்போது, இப்பல்கலைக்கழகத்தில், மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 19 கல்லூரிகளைச் சேர்ந்த 79 சிறப்புத் துறைகள் இடம்பெற்றுள்ளன. முழுமையான வசதி படைத்த முன்னேறிய பரிசோதனை அறைகள் மற்றும் ஆராய்ச்சி தளங்கள் இங்கு உள்ளன. மாணவர் எண்ணிக்கை 41 ஆயிரமாகும். இதில் பட்ட வகுப்பு மாணவர் எண்ணிக்கை 17 ஆயிரமாகும். முதுகலை பட்ட மாணவவர் எண்ணிக்கை சுமார் 5440 ஆகும். டாக்டர் பட்ட மாணவர் எண்ணிக்கை 1970 ஆகும். அன்னிய மாணவர் எண்ணிக்கை சுமார் 450 ஆகும். இப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லிங் நான் கல்லூரியின் புதிய வளாகம், இயற்கை அழகும் முன்னேறிய வசதியும் கொண்டுள்ளது. சீனாவிலுள்ள மிக அழமான வளாகங்களில் ஒன்று என கருதப்படுகிறது. பல்கலைக்கழக நூலகமானது, தென் கிழக்குச் சீனாவில் நூல்கள் மிக அதிகம் உள்ள நூலகங்களில் ஒன்றாகும். இப்பல்கலைக்கழகத்தை மேலும் அறிந்து கொள்ள, http://www.zsu.edu.cn/ஐப் பார்க்கவும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11