ஷாங்காய் போக்குவரத்துப் பல்கலைக்கழகம்

ஷாங்காய் போக்குவரத்துப் பல்கலைக்கழகம் 1896ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அறிவியல் துறையை அடிப்படையாகவும், பொறியியல் துறையை முக்கியமாகவும் கொண்ட சீனாவின் முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். கப்பல் மற்றும் கடல் பொறியியல், இயந்திரம் மற்றும் இயக்கு ஆற்றல் பொறியியல், மின்னணு தகவல் மற்றும் மின்னியல் பொறியியல் உட்பட 21 கல்லூரிகள், அறிவியல், பொறியியல், பொருளியல் கல்வியியல், சட்டவியல் முதலிய சிறப்புத்துறைகளைச் சேர்ந்த 55 சிறப்புப் பாடங்கள் இடம்பெறுகின்றன. செய்தித்தொடர்பு மற்றும் மின்னணு அமைப்பு, கப்பல் மற்றும் கடல் பொறியியல், தானியங்கியல் கட்டுப்பாடு, கலப்பு அரை உற்பத்திப் பொருட்கள், உலோக பிளாஸ்டிக் தன்மை பதனீடு முதலிய சிறப்புத்துறைகள் உலகின் முன்னேறிய நிலையை நெருங்கியுள்ளன.
தற்போது, இப்பல்கலைக்கழகத்தின் முழு நேர பட்ட வகுப்பு மாணவர் எண்ணிக்கை 14 ஆயிரமாகும். முதுகலை பட்ட மாணவர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் எண்ணிக்கை சுமார் 1600 ஆகும்.

பல ஆண்டுகளாக, அரசியல் வித்தகர், சமூக கர்மவீரர், தொழிலதிபர், அறிவியலாளர், பேராசிரியர், பொறியியல் தொழில் நுட்ப நிபுணர்கள் உள்ளிட்ட ஒரு லட்சத்துக்கு அதிகமான திறமைசாலிகளை ஷாங்காய் போக்குவரத்துப் பல்கலைக்கழகம் பயிற்றுவித்துள்ளது. இப்பல்கலைக்கழகத்தை மேலும் அறிந்து கொள்ள நாடுக: http://www.sjtu.edu.cn/.
1 2 3 4 5 6 7 8 9 10 11