• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[இசை அமைப்பாளர்கள்]
லியு வென் ஜின்

லியு வென் ஜின் 1961இல் இசைப் பாதுகாப்பு மையத்தில் பட்டம் பெற்ற ஒரு புகழ்பெற்ற சீன இசை அமைப்பாளராவார். இவர் தேசிய மத்திய இசைக் குழுவின் கலை மேற்பார்வையாளராகவும் மற்றும் தலைவராகவும் இருந்ததுடன் இப்போது இவர் நடனம் மற்றும் பாடல்களின் சீன அரங்கின் ஆரிரியராகவும் இருக்கிறார். 2001இல் கொரிய மத்திய பல்கலைக் கழகத்தின் தேசிய இசைக் கல்லூரி இவரை ஒரு பேராசிரியராக அமர்த்தியது.

லியு தமது இளம் வயதில் கல்லூரிப் படிப்பில் திறமைசாலியாக இருந்ததுடன் "சிறந்த மாணவருக்கான" விருதையும் பெற்றார். இவர் படித்த போது தமது கன்னி இசைப் படைப்புக்களை தொகுத்தார். இவை வட ஹேபெய்யின் நாட்டுப் பாடல் மற்றும் சன் மென் மள்ளத்தாக்கின் சலனம் போன்றன ஆகும். இவை பீடில் மற்றும் பியானோ போன்றவற்றின் சேர்க்கையாக இருந்தன. 1999இல் சன் மென் பள்ளத்தாக்கின் சலனம் "நவ சீனாவின் அரங்குக் கைத்திறன் மற்றும் தொகைக் காட்சி மற்றும் திரைப்படங்கள் கலையின் உன்தைமான வேலைகள்" என்ற ஆல்பத்துக்குள் தெரிவு செய்யப்பட்டது. 1982 மே மாதம் ஷாங்காய் வசந்த கால இசை கச்சேரியில் இவருடைய முதலாவது பிடில் கச்சேரியின் அரங்கேற்றம் உயர்ந்த வெற்றியை அடைந்தது. பல வருடங்களாக இந்த இசை நாடா வேறுபட்ட நாடுகள் மற்றஉம் பிராந்தியங்கலில் பல்வேறுபட்ட வடிவங்களில் இசைக்கப்பட்டு ஆர்வமான வரவேற்பைப் பெற்றது.

லியு 40 வருடங்களுக்கு மேலாக ஒரு பெரிய அளவான பல்வேறுபட்ட இசை வடிவங்களையும் அதே போன்று சிறிய இசையினையும் தொகுத்து இணைத்தார். இவர் சீனப் புரட்சிப் பாடல் இசைக்காவிய தொகுப்பிலும் பங்கு பற்றினார்.

லியு நாட்டார் இசை துறையில் "லியு சியான் குவாவின் பின்னர் அதிக அடையாளமான தொகுப்பாளர்" என அழைக்கப்படுகின்றார். மேலும் வட அமெரிக்காவில் உள்ள சீன இசை ஆய்வு சபையானது லியுவை சீனப் பெருநிலப்பரப்பில் அநேக மனதை கவர்கின்ற தொகுப்பாளர்களில் ஒருவராகக் குறிப்பிட்டது.

லியு பல டஜன் நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் தளிப்பட்ட இசைக் கச்சேரிகளை நடாத்தவும் வழிநடத்தலுக்காகவும் சுற்றுப்பயணம் செய்துள்ளார். இவர் ஜப்பானில் மற்றும் கொரிய தொகுப்பாளர்களுடன் ஆசிய வாத்தியக் குழுவையும் ஏற்படுத்தினார். லியு கலாச்சார அமைச்சால் அசாதாரணமாக பங்களிப்புச் செய்த கலைஞர் என பாராட்டப்பட்டார். இவர் அரசு வையால வழங்கப்பட்ட கௌரவச் சான்றிதழையும் பெற்றதோடு அரசாங்கத்தின் சிறப்பு ஊதியத்தையும் அனுபவிக்கிறார்.

[மகிழுங்கள்]: 《பெரும் சுவர்》

1 2 3 4 5 6 7 8 9 10 11 12
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040