ஜாங் லி
புகழ் வாய்ந்த பாடலாசிரியர் ஜாங் லி, தாலியன் நகரில் 1932 அக்டோபர் 17ஆம் நாள் பிறந்தார். 1948இல் இவர் வடகிழக்கு லு சின் கலைக் கழகத்தில் சேர்ந்து இலக்கியத்தில் பட்டம் பெற்றார். 1955இல் பெய்ஜிங் சாதாரணப் பல்கலைக் கழகத்தில் சீன இலக்கியத் துறையில் கற்பிக்கத் தொடங்கினார். 1970இல் அவர் தேசிய இசையின் மத்திய வாத்தியக் குழவின் இயற்றுனர் குழுவுக்குள் இருந்து சிறந்த நிலை நாடக ஆசிரியராக அமர்த்தப்பட்டார்.
அவருடைய 50 ஆண்டுகளுக்கு மேலான ஒரு இசையமைப்பாளராக இருந்த காலப்பகுதியின் போது ஜாங் லி பல பிரபலமான படைப்புகளை உருவாக்கினார். வேலியின் நிழல், ஆசியவின் அச்சமுற்ற ஒரு காற்று மற்றும் நானும் என்னுடைய தாய்நாடும் போன்றனவாகும்.
ஜாங்கினுடைய தொழில் வாழ்க்கை இலகுவான பயணமாக இருக்கவில்லை. 1960கலில் அவருடைய ஆரம்ப வேலைகள் முதிய தலைமுறையினரால் நிராகரிக்கப்பட்டன. இதனால் அவர் மனம் தளரவில்லை. மாறாக இது அவரை மேலும் கடினமாக வேலை செய்ய வைத்தது. இறுதியாக அவர் வெற்றியை அடைந்ததோடு நாடு முழுவதும் பார்வையாளர்களால் விரும்பப்பட்டார். அவருடைய பாடல்கள் எப்போதும் மக்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கின்ற தனிப்பட்ட கருத்துக்களின் முழுமையான மற்றும் மிக இனிமையான வெளிப்பாடாக இருந்தன.
ஜாங் இப்போதும் வெவ்வேறு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு இருக்கிறார். இவர் ஏறத்தாழ 70 வயதில் இருந்து இடுப்பு பிடிப்பு நோயினால் துன்பப்பட்ட போதிலும், இவர் இப்பவும் தொகுத்தல் மற்றும் வெவ்வேறு இசை நிகழ்ச்சிகலில் பங்குபற்றுதல் போன்றவற்றில் ஆர்வமாக இருக்கிறார்.
அவர் தம்மை கலை சேவைக்கு அர்ப்பணித்துள்ளார்.
[மகிழுங்கள்]: 《நானும் எனது தாய்நாடும்》
1 2 3 4 5 6 7 8 9 10 11 12