தியன் ஹன்
தியன் ஹன் சீனாவின் நாடக இயக்கத்தின் நிறுவனர். நாடக சீர்திருத்தத்திந் முன்னோடி. இவன் "நவீன குவன் ஹன்ச்சிங்" என அழைக்கப்பட்டார். இவர் கூத்துக்கள் மற்றும் நாகங்கலை எழுதியது மட்டும் அன்றி, திரைக் கதையும், கவிதைகளும் எழுதியதோடு, படங்களுக்கு இசையும் அமைத்தார். தியன் ஹன் பிரபல நாடக ஆசிரியராகவும் கவிடராகவும் கருதப்படுகின்றார்.
தியன் ஹன் ஹுனான் மாநிலத்தில் சாங்ஷாவில் 1898 மார்ச் 12ஆம் நாள் பிறந்தார். மே நான்கு இயக்கத்திற்குப் பின்னர் இவர் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும், பிரபுத்துவக்கு எதிராகவும் உள்ள புதிய கலாச்சார இயக்கத்தில் ஈடுபடுத்திக் கொண்டார். இவர் சீனாவின் நவீன கலை வரலாற்றில் ஒரு முக்கிய பங்காற்றிய தென் சமூகம் என்ற அமைப்பை நிறுவினார். அந்த நேரத்தில் அவர் எழுதிய சிற்றுண்டிச் சாலையில் ஒரு இரவு, சிறந்த நடிகனின் இறப்பு போன்ற நாடகங்கள் சீன நாடகப் பாலைவனத்தில் பூத்த வியப்பிற்குரிய மலர்களாகத் திகழ்ந்தன. 1932 தியன் ஹன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். பின்னர் அவருடைய செதத்தில் இரண்டாவது உச்சக் கட்டம் வந்தது. அவர் இடது சீரிகளின் நாடகங்கல் மற்றும் திரைப்படங்களின் முக்கிய சக்திகளில் ஒன்றாகத் திகழ்ந்தார். அவர் பல நாடகங்கலை எழுதிதோடு மூன்று நவீனப் பெண்கள், தாய்மையின் வெளிச்சம் போன்ற பல திரைக் கதைகளையும் எழுதினார். ஷாங்காய் துறைமுகத் தொழிலாளரின் வாழ்க்கைப் போராட்டத்தைச் சித்திரிக்கும் யாங்க்ஸி நதியின் புயல் என்ற சுவருடைய இசை நாடகம் சீனாவின் ஆரம்ப கலை புரட்சிகரமான இசை நாடகங்கலில் ஒன்றாகும். தியன் ஹன் பல நாகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் பல பிரபலமான இசைப் பாடல்களை இயற்றினார். இப்பாடல்களில் படையின் அணிவகுப்பு என்பது கோடிக்கணக்கான மக்களைக் கவர்ந்தது. இது சீன மக்களை அவர்களுடைய தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக போராடுவதற்குத் தூண்டியது. நவ சீனாவின் தோற்றுவிக்கப்பட்டதும். இந்தப் பாடல் தேசிய கீதமாக தெரிவு செய்யப்பட்டது.
நவ சீனா தோற்றுவிக்கப்பட்ட பின்னர் தியன் ஹன் தலைமைப் பதவியில் இருந்த போதிலும் கூட, எழுதுவதை நிறுத்தவில்லை. இவர் செல்வி தோட்வின் நீதிக்கா வாதாடிய துணிச்சல் மிக்க பண்டைய நாடக ஆசிரியருக்கு தன்னுடைய மரியாதையை வெளிப்படுத்துவதற்காக குவன் ஹன்ச்சிங்கை எழுதினார். அவர் சியே யௌ குவானை எழுதியதற்காக, நால்வர் குழு தம்மைத் துன்புறுத்தும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. நீண்டகாலம் விமர்ச்சித்து, அடிபட்ட பின்னர். 1968இல் தியன் ஹன் வேதனை தாங்காமல் மறைந்து போனார். அவர் யாருக்கும் எதுவும் சொல்லவில்லை. அவருடைய சாம்பல் கூட கிடைக்கவில்லை. பத்து வருடத்துக்கு பின்னர் அவர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார்.
தமது வாழ்நாளில் அவர் பல நூல்களை எழுதினார். அவர் 60க்கு மேற்பட்ட கூத்துக்கள், 20க்கு மேற்பட்ட நாடகங்கள், பத்து திரைப்படக் கதைகள் மற்றும் 900க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதினார். பல சிறந்த பாடல்கள், கட்டுரைகள் மற்றும் மொழிபெயர்ப்பு நூல்களும் அடங்கும். சீன நாடகங்கள் மற்றும் கவிதைகளுக்கு தியன் ஹன்னின் பங்களிப்பு அழிக்க படியாதது. அவருடைய பெயர் சீனாவின் நவீன நாடகங்கள் மற்றும் கவிதைகள் வரலாற்றில் பொறிக்கப்படும்.
[கேட்டு மகிழ]: 《வீரமான இராணுவ அணி வகுப்பு》
1 2 3 4 5 6 7 8 9 10 11 12